ஸ்டாலின் வெளியிட்டது போல மோடி வெளியிடுவாரா? -தயாநிதி மாறன் சவால்

modi challenge dayanidhimaran-
By Irumporai May 18, 2021 12:09 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா நிதி குறித்த விரிவான தகவல்களை தமிழக அரசு கொடுத்தது போல பிரதமர் மோடியும் கொரோனா நிதி தகவல்களை கொடுப்பாரா என தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று முதல்வர் கொரோனா நிவாரண நிதியில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசியல்ம் சினிமா பிரமுகர்கள் என பலர் தங்களது நிதியை வழங்கிவருகின்றனர்.

இதுகுறித்த தகவல்கள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது வரை கிடைத்துள்ள ரூ.69 கோடியில் ரூ.50 கோடியை மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் தனது ட்வீட்டர் பதிவில்: மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்கிறார். முதல்வர் நிவாரண நிதி செலவினங்கள் மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கப்படுகின்றன.

இதே போல் பிரதமர் மோடியும் பிஎம்கேர் நிதி விவரத்தை இதேபோல வெளியிடுவாரா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.