பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

Narendra Modi Prime Minister of India Banwarilal Purohit
By Thahir Jul 10, 2021 01:31 PM GMT
Report

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்! | Modi Prime Minister Banwarilal Purohit

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது. இதையடுத்து பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு நடைபெறுகின்ற முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் நிலவரம், புதிய அரசின் செயல்பாடுகள் , மாநில சட்டம் ஒழுங்கு நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒன்றியம் மற்றும் ஜெய்ஹிந்த் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை, நீட் தேர்வு விவகாரம் மற்றும் தடுப்பூசி சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் பிரதமருடனான ஆளுநரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.