மோடியா, லேடியா? என கேட்ட ஜெயலலிதா - ஆட்சியை புகழ்ந்த பிரதமர் மோடி!

J Jayalalithaa Tamil nadu Narendra Modi
By Jiyath Feb 28, 2024 03:59 AM GMT
Report

ஜெயலலிதா

2014 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் பல திருப்புமுனைகளை உருவாக்கியது. அப்போது 1984ல் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெற்றிருந்த பாஜக அந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

மோடியா, லேடியா? என கேட்ட ஜெயலலிதா - ஆட்சியை புகழ்ந்த பிரதமர் மோடி! | Modi Praises Jayalalitha In Tiruppur

அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா "மோடியா, இந்த லேடியா?" என கேள்வி எழுப்பி தமிழகத்தில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், அந்த தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வென்றது.

வேல் யாத்திரைக்கு 4 எம்.எல்.ஏக்கள்; இதில் 40 எம்.பிக்கள் - அண்ணாமலை பேச்சு!

வேல் யாத்திரைக்கு 4 எம்.எல்.ஏக்கள்; இதில் 40 எம்.பிக்கள் - அண்ணாமலை பேச்சு!

பிரதமர் மோடி 

இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி அமையவில்லை" என்று பேசினார்.

மோடியா, லேடியா? என கேட்ட ஜெயலலிதா - ஆட்சியை புகழ்ந்த பிரதமர் மோடி! | Modi Praises Jayalalitha In Tiruppur

தன்னை எதிர்த்து "மோடியா? இந்த லேடியா?" என முழக்கமிட்டு வென்ற ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்திருப்பது அரசியல் விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.