மோடி மேற்குவங்க தேர்தலில்பிஸியாக உள்ளார்: ஆவேசமான உத்தவ் தாக்கரே!
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது.
அதே சமயம் ,கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிராவில் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பல கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் அம் மாநில அரசு தவித்து வருகிறது.
இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பிரச்னை தீவிரமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பேச பிரதமரை தொடர்பு கொண்டேன். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக உள்ளார் என கூறினார்
மேலும் தற்போது மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை எந்த அளவு உள்ளது என கணிக்க முடியாது. ஆகவே கொரோனா பரவலை தடுக்க தொழில் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.