பிரதமருக்கு நானே பேனர் வைப்பேன் : மாவட்ட ஆட்சியரை உலுக்கி எடுத்த நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman BJP Narendra Modi
By Irumporai Sep 03, 2022 05:15 AM GMT
Report

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீர்மலா சீதாராமன்

அப்போது அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும் அவர் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறினார்.

கோபமான நிதி அமைச்சர்

இதனால், கோபமடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர்.

பிரதமருக்கு நானே பேனர் வைப்பேன் : மாவட்ட ஆட்சியரை உலுக்கி எடுத்த நிர்மலா சீதாராமன் | Modi Photo In The Ration Shop Nirmala Sitharaman

மாநில அரசு ரூ.3.30 ஒரு கிலோவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது. போக்குவரத்து செலவை கூட மத்திய அரசே ஏற்கிறது. ஆனால், தெலங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது.

நானே பேனர் வைப்பேன்

கொரோனா சமயத்தில், மத்திய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றுமே தெரியவில்லை. மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும்.

பிரதமருக்கு நானே பேனர் வைப்பேன் : மாவட்ட ஆட்சியரை உலுக்கி எடுத்த நிர்மலா சீதாராமன் | Modi Photo In The Ration Shop Nirmala Sitharaman

இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, மத்திய அரசுக்கு விஸ்வாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என கூறினார்.