ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக, கருப்பு மை பூசிஅழித்த த.பெ.தி.க : வைரலாகும் வீடியோ

Tamil nadu BJP Narendra Modi
By Irumporai Jul 27, 2022 12:43 PM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடியின் போட்டோக்களை பாஜகவினர் ஒட்டிய நிலையில், பெரியாரிஸ்ட்டுகள் அதை மை பூசி அழித்த சம்பவம், ஒரே நாளில் நடந்துள்ளது.

பிரதமரின் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நாளை தொடங்கவுள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைக்கவுள்ளார்.

ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக, கருப்பு மை பூசிஅழித்த த.பெ.தி.க : வைரலாகும் வீடியோ | Modi Photo Glued Chess Olympiad Poster Chennai

இந்த தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பதாகைகள் சென்னை முழுவதும், தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்டு இருக்கிறது.

மைபூசிய நபர்கள்

இதில், பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை என பாஜகவினர் தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வந்தனர். இன்று பிரதமர் மோடியின் போட்டோவை , ஏற்கனவே தமிழக அரசு செய்துள்ள விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டி வந்தனர். இந்த வீடியோ இணையத்தில் இன்று வைரலாக பரவியது.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினைச் சேர்ந்தவர்கள், பாஜகவினரால் ஒட்டப்பட்ட பிரதமர் படத்தினை மை பூசி அழித்துள்ளனர். இந்த சம்பவம், இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், பிரதமர் மோடியின் படங்களை மையிட்டு அழித்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.