சென்னை 19-ஆம் தேதி நிகழ்ச்சி - மீண்டும் ஒரே மேடையில் பிரதமரும், முதல்வரும்..!

Udhayanidhi Stalin M K Stalin Narendra Modi Chennai
By Karthick Jan 13, 2024 06:18 AM GMT
Report

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்து திருச்சி புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி தமிழகம் வருகை

நாட்டின் பிரதமர் மோடி இந்த ஆண்டில் முதல் பயணமாக தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

modi-participating-in-khelo-india-opening-chennai-

பல்கலைக்கழக பட்டமளிப்பு மற்றும் திருச்சி விமான நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மக்களிடமும், மாணவர்களிடமும் உரையாற்றினார்.

மீண்டும் வருகை

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். சென்னையில் வரும் 19-ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ள கேலோ இந்திய விளையாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

பிரதமர் 11 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்; அனைவரும் வாழ்த்து சொல்லுங்கள் - அண்ணாமலை வேண்டுகோள்!

பிரதமர் 11 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்; அனைவரும் வாழ்த்து சொல்லுங்கள் - அண்ணாமலை வேண்டுகோள்!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி சென்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமருக்கு அழைத்திருந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் என கூறப்படுகிறது.

modi-participating-in-khelo-india-opening-chennai-

அவ்வாறு பிரதமர் சென்னை வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றால், தொடர்ந்து ஒரே மாதத்தில் ஒரே மேடையில் நாட்டின் பிரதமரும் தமிழக முதல்வரும் தோன்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.