அதிகரிக்கும் மரண ஓலம்; கதறும் இந்தியர்கள் - பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
சூடானில் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்ற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியர்கள் தவிப்பு
சூடானில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவமும், துணை ராணுவமும் கடும் சண்டையிட்டு வருகின்றனர். அதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கார்டூம் நகரில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டுவிட்டு அருகே உள்ள மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

சிலர் நடந்தும், சிலர் வாகனங்களிலும் பாதுகாப்பு கருதி குடும்பத்தோடு கிளம்பினர். சாலையில் நடந்து செல்வது கூட அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோடி உத்தரவு
அதேபோல 3,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று ஐநா கூறியுள்ளது. இதில், சிக்கியுள்ள 3000 இந்தியர்களை பத்திரமாக எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல இந்த மோதலில் கடந்த வாரம் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உடனடியாக போரை நிறுத்த ஐநா வலியுறுத்தியுள்ளது.