‘‘பிரதமர் மோடி பேசறத பார்க்கும்போது மாயாஜால வித்தை மாதிரி இருக்கு’’ - காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
இந்த வருடத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மாயாஜாலவித்தை போல் உள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விடுத்துள்ளஅறிக்கையில்:
கடந்த 20 ஏப்ரல் மாதம் முதலே பிரதமர் மோடி 9 முறை மக்களிடம் பேசியுள்ளார். இதற்கு முன்பு 8 முறை பேசியுள்ளார்ஆனால் எந்த பலனும் இல்லை.
நேற்று பேசிய பிரதமர் மோடி தனது உரையில் 21ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்படும் என்றும்,இதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இதில் 4 கோடி பேருக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என பிரதமர் கூறுவது மாயாஜால வித்தை போல் உள்ளதாக கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மேலும்,மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகும். தமிழக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் நிலையில் மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளிநாடுகளில் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு உதவவில்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்திற்கு தடுப்பூசி குறைவாகவே உள்ளது.
1. 2020 ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த திங்கட்கிழமை வரை கொரோனா தொடர்பாக 9 முறை நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். இதற்கு முன்பு 8 முறை அவர் உரையாற்றியதில் எந்த பலனும் ஏற்படவில்லை. pic.twitter.com/GXPuRIdqoF
— KS_Alagiri (@KS_Alagiri) June 8, 2021
குஜராத்துக்கு அதிக தடுப்பூசி வழங்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசி கொடுத்திருப்பது மோடி அரசின் பாரபட்ச போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்தப் போக்கை பிரதமர் கைவிட்டு, உடனடியாக தமிழகத்திற்கு தடுப்பூசி விநியோகம் செய்வதில் நியாயம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாக அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.