Tuesday, Jul 15, 2025

மோடி தான் பிரதமராக வரவேண்டும்...மீண்டும் குழப்பும் ஆர்.பி. உதயகுமார்

ADMK BJP Narendra Modi K. Annamalai Edappadi K. Palaniswami
By Karthick 2 years ago
Report

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவின் பல தலைவர்கள் கூறி வரும் நிலையில், தற்போது ஆர்.பி.உதயகுமாரின் கருத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி. உதயகுமார்

செய்தியாளர்கள் சந்திப்பு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாலையில் உணவு வழங்கும் வகையில் 100 அரிசி மூட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்பித்தார்.

modi-needs-to-became-pm-says-rb-udhayakumar

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணியில் ஸ்டாலினுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வலதுபுறத்தில் எடப்பாடியாரும், இடதுபுறத்தில் நட்டாஜியும் அமர்ந்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

பிரதமராக மீண்டும் மோடியே வரவேண்டும்

மேலும், முரண்பாடு எங்கே இல்லை? என வினவிய அவர், இந்தியா கூட்டணியில் மேற்கு வங்காளம் கேரளாவில் கூட்டணி சேரமாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கூறுவதை சுட்டிக்காட்டி, முரண்பாடு அனைத்து இடத்திலும் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி நிதானத்தோடு, பெருமையாக விட்டுக் கொடுத்து வருகிறார் என்று கூறினார்.

modi-needs-to-became-pm-says-rb-udhayakumar

தொடர்ந்து பேசிய அவர், தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமராக மீண்டும் மோடியே வரவேண்டும் என நினைப்பதாக கூறி, அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி வரவேண்டும் என எதிர்பார்த்து வருவதாக தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கள் தற்போது சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.