இந்தியாவுடன் இணைந்து புதுமைகளை உருவாக்க தயார்- இமானுவேல் மேக்ரான்

Narendra Modi Emmanuel Macron India France
By Yashini Feb 18, 2026 06:30 AM GMT
Report

பிரான்ஸ் இந்தியாவுடன் இணைந்து புதுமைகள் உருவாக்க தயாராக இருப்பதாக இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் உறவுக்கு எல்லைகள் இல்லை என்று நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் உள்ள பாரத மண்டபம் மையத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  

இதில் Anura Kumara Dissanayake உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்ற நிலையில் மாநாட்டில் கலந்துகொள்ள மேக்ரான் இந்தியா வந்தார்.

இந்தியாவுடன் இணைந்து புதுமைகளை உருவாக்க தயார்- இமானுவேல் மேக்ரான் | Modi Meets With French President Macron In Mumbai

மும்பையில், 2008 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோடி- மேக்ரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

கர்நாடகாவில் உள்ள Tata-Airbus நிறுவனம் தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர் இறுதிக்கட்ட பணிகளை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர். 

பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தமும் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவுடன் இணைந்து புதுமைகளை உருவாக்க தயார்- இமானுவேல் மேக்ரான் | Modi Meets With French President Macron In Mumbai

Safran நிறுவனத்துடன் இணைந்து HAMMER ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்க Bharat Electronics Limited ஒப்பந்தம் செய்துள்ளது. 

பிரான்சில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு ஷெங்கன் விசா வழங்கவும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், பிரான்சில் இந்தியாவின் UPI பணப்பரிமாற்ற சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டை "இந்தியா–பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு" என இரு தலைவர்களும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.