ஜெர்மன் பிரதமர் ஒலஃப் ஸ்கோல்ஸ்-ஐ சந்தித்தார் பிரதமர் மோடி - இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை
பிரதமர் மோடி நேற்று இரவு தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்று இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார்.
6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் கலந்துரையாட உள்ளார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார். 3 நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
ஜெர்மனி சென்றடைந்த பிரதமரை வரவேற்பதற்காக இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் அங்கு பெருமளவில் கூடி பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஒலஃப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துதல், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.