பிரதமர் மோடி வாக்குப்பதிவு நாளில் நேரலையில் உரை - தேர்தல் விதி மீறலா?

election modi live vote polling
By Jon Apr 06, 2021 11:40 AM GMT
Report

தமிழகத்தோடு சேர்த்து ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது பாஜக தலைமையகத்திலிருந்து நேரலையில் உரையாற்றினார்.

இது தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது. ஆனால் வாக்குப்பதிவு நாள் அன்று நேரலையில் உரையாற்றுவது தேர்தல் நடத்தை விதி மீறல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே பல இடங்களில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் ஆளும்கட்சி மீதான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.