இந்திய பிரதமர் மோடி தான் உண்மையான பாஸ் ஆஸ்திரேலியா பிரதமர் பெருமிதம்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் பாஸ் என அழைத்துள்ளார்.
அரங்கில் திரண்ட மக்கள்
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நேற்று பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை பிரதமர் மோடி சிட்னியில் உள்ள பிரமாண்டமான அரங்கில் சந்தித்தார்.

அரங்கத்தில் பிரதமர் மோடியை காண சுமார் 21 ஆயிரம் இந்தியர்கள் திரண்டு இருந்தனர். அந்த அரங்கத்தில் இதற்கு முன்பு அமெரிக்க ராக் இசைப்பாடகர் புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் இசை நிகழ்ச்சிக்கு தான் இவ்வளவு மக்கள் வந்தனர்.
பிரதமர் மோடியை புகழ்ந்த ஆஸ்திரேலியா பிரதமர்
புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் ரசிகர்கள், அவரை ‘தி பாஸ்’என்று அழைப்பர். ஆனால் இன்று உண்மையான பாஸ் பிரதமர் மோடி தான் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜாப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.