மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்; நான் அவரின் மிகப்பெரிய ஆதரவாளர் - அமெரிக்க பாடகி!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிப் பாதையில் உள்ளதாக அமெரிக்க பாடகி மெரி மில்பென் தெரிவித்துள்ளார்.
மெரி மில்பென்
பிரபல அமெரிக்க பாடகியும், நடிகையாக இருப்பவர் ஆப்பிரிக்க-அமெரிக்கரான மெரி மில்பென். இவர், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமேரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார்.

இந்நிலையில் மெரி மில்பென் அளித்த பேட்டி ஒன்றில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிப் பாதையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறந்த தலைவர்
அவர் கூறியதாவது "இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவிற்கு பிரதமர் மோடி சிறந்த தலைவராக விளங்குகிறார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புகின்றனர் என நான் நம்புகிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிப் பாதையில் உள்ளார்.
ஏனென்றால், மோடி இந்தியாவின் சிறந்த தலைவராவார். நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். அதில் எந்த ரகசியமும் இல்லை' என்றார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil