இது மோடி புளுகு - நம்புவதற்கு நாங்கள் ஏமாளிகளா..? மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழ்நாட்டிற்கான திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சனம்
பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து விழாவில் அவர் பேசியது வருமாறு,
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடன் இங்கு வந்துள்ளேன். அரசு நிகழ்ச்சியா..? அல்லது மண்டல மாநாடா..?என்று எண்ணக்கூடிய அளவுக்கு கூட்டம் இருக்கிறது.
ஒரு கோப்பில்...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம் என ஏராளமாக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம்.
திராவிட மாடல் திமுக ஆட்சி மீது பொறாமைப்பட்டு, பொய், அவதூறுகளை வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி மூலம் பரப்புவோர்களுக்கு பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது. நான் ஒரு கோப்பில் கையெழுத்திட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
10 ஆண்டு ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா விவசாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது?
மோடி புளுகு
அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள். மோடி உத்தரவாதம் என்று கூறுகிறார். வேலைவாய்ப்பு குறித்த அளித்த வாக்குறுதி என்ன ஆனது?அடுத்த வாரம் பிரதமர் வரும்போது, அவரிடம் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா? மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார்.அண்ட புளுகு, ஆகாச புளுகு போல இது மோடி புளுகு. பிரதமரின் கட்டுக்கதைகள் எடுபடாது - அதனை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா..?
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.