ஒரே மாதத்தில் மூன்று முறை தமிழகம் வருகிறார் மோடி

Narendra Modi
By Fathima Feb 19, 2026 04:16 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள திமுக கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற NDA கூட்டணியும் வியூகங்களை வகுத்து வருகின்றன.

தமிழகம் மீது தனி கவனம் செலுத்தும் பிரதமர் மோடி, பிரசாரத்திற்காக மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை தமிழகம் வருகிறார்.

ஒரே மாதத்தில் மூன்று முறை தமிழகம் வருகிறார் மோடி | Modi Is Expected To Visit Three Times

மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

மார்ச் 1 ஆம் தேதி மதுரைக்குவருகை தரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மார்ச் 7ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு வருகை தரவுள்ளார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பகுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

ஒரே மாதத்தில் மூன்று முறை தமிழகம் வருகிறார் மோடி | Modi Is Expected To Visit Three Times