Thursday, Jul 17, 2025

நான் அஞ்சமாட்டேன்..மோடி என்னை கண்டு பயப்படுகிறார் - ராகுல் காந்தி அதிரடி பேட்டி

Indian National Congress Rahul Gandhi BJP Narendra Modi Government Of India
By Thahir 2 years ago
Report

அதானி குறித்து கேள்வி எழுப்பியதால் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு என்று தெரிவித்துள்ளார்.

நான் சாவர்க்கர் இல்லை

நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

* நாடாளுமன்றத்தில் அதானி குறித்து அடுத்த கேள்வி எழுப்ப கூடாது என்பதற்காக தகுதி நிக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Modi is afraid of me - Rahul Gandhi

* பாஜக  அதானியை காப்பாற்றுகிறது.மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை என்றார்.

* இந்தியாவில் தொடர்ந்து ஜனநாயகம் பற்றி பேசி வந்தேன். தற்போது 20 ஆயிரம் கோடி முதலீடு எங்கிருந்து வந்தது.

* இந்தியாவிற்கு எதிராக நான் எங்கும் பேசவில்லை.பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

* ஜனநாயகத்திற்கான எனது குரலை ஒடுக்கமுடியாது.

* நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று கோபமாக பேட்டி அளித்தார்.

இந்த நிலையில் இந்தியா ஜனநாயகத்தின் கருப்பு தினம் (#BlackDayForIndianDemocracy) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.