பிரதமர் மோடிக்கு மெஸ்ஸி பெயர் பதித்த டிஷர்ட் பரிசு...! வைரலாகும் புகைப்படம்..!

Lionel Messi Narendra Modi Viral Photos Argentina
By Nandhini 1 மாதம் முன்

இந்திய பிரதமர் மோடிக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பெயர் பதித்த டிஷர்ட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி

FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி கால்பந்து ரசிகர்களால் இதுவரை கண்டிராத மிகவும் உற்சாகமான கால்பந்து விளையாடானது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிக் கொண்டது.

பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு லயோனல் மெஸ்ஸி தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். உலக கோப்பையை கைப்பற்றிய மெஸ்ஸியை அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு ரசிகர்கள் மெஸ்ஸியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

இதனையடுத்து, மெஸ்ஸியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட அந்நாடு பரிசீலனை செய்து வருகிறது.

மெஸ்ஸி அறை மினி மியூசியமாக அறிவிப்பு

அர்ஜென்டினா பல தசாப்த கால முயற்சிகள் மற்றும் 5 வெவ்வேறு உலகக் கோப்பைகளுக்குப் பிறகு கால்பந்தாட்ட சக்தியாக தனது நிலையை மீட்டெடுத்தது. 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான தங்கப் பந்தை பெற்றார். கைலியன் எம்பாப்பேவின் 8 கோல்களுக்குப் பதிலாக அவர் 7 கோல்களை அடித்தார்.

போட்டியின் போது அதிக கோல்களை அடித்ததற்காக, பிரெஞ்சு கால்பந்து வீரருக்கு தங்க காலணி வழங்கப்பட்டது. லயோனல் மெஸ்ஸியின் ஹோட்டல் அறையை ஒரு சிறிய அருங்காட்சியகமாக மாற்றி கத்தார் பல்கலைக்கழகம் அவரை கவுரவித்தது.

modi-inida-president-ypf-gift-lionel-messi-t-shirt

பிரதமருக்கு மெஸ்ஸி டி-ஷர்ட் பரிசு

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக மெஸ்ஸி பெயர் பதித்த டி-ஷர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் பெயர் பதித்த டி.ஷர்ட்டை பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவின் YPF நிறுவனத்தின் தலைவர் பாப்லோ கான்சலெஸ் பரிசாக வழங்கியுள்ளார்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.