இலங்கை பொருளாதார நெருக்கடியை அனுமனைப் போல் பிரதமர் சுமக்க தயார் - அண்ணாமலை பேச்சு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
நேற்று, நுவேரா எலியா மாவட்டத்தில் உள்ள சீதை அம்மன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல், இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க இந்தியாவும், பிரதமர் மோடியும் தயாராக இருப்பதாக இலங்கை சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.