ஜெர்மனியில் பாட்டுப்பாடிய சிறுவன்.. சொடக்குப்போட்டு ரசித்து கேட்ட பிரதமர் மோடி. - வைரலாகும் வீடியோ

Narendra Modi Viral Video
By Nandhini May 02, 2022 10:27 AM GMT
Report

பிரதமர் மோடி நேற்று இரவு தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார். 

ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் கலந்துரையாட உள்ளார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார். 3 நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.

பிரதமரை வரவேற்பதற்காக இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் அங்கு பெருமளவில் ஜெர்மனியில் கூடியிருந்தார்கள். அதில் குழந்தைகள்தான் அதிகளவில் இருந்தனர்.

அப்போது, பிரதமரை வரவேற்க வந்திருந்த ஒரு சிறுவன், “ஹே ஜன்ம பூமி பாரத் ஹே கர்மா பூமி பாரத்” என்ற பாடலை பிரதமர் மோடி முன்பு பாடினார். சிறுவன் பாடுவதை பிரதமர் மோடி மிகவும் ரசித்து கேட்டார். சிறுவன் பாடும்போது சொடக்குப் போட்டு சிறுவனை உற்சாகப்படுத்தினார். சிறுவனின் குரல்வளத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, அவரை ஆசிர்வதித்தார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.