ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி - சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை

Narendra Modi
By Nandhini May 02, 2022 05:26 AM GMT
Report

பிரதமர் மோடி நேற்று இரவு தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், அவர் இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார்.

ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார். 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் கலந்துரையாட உள்ளார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார். 3 நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், பெர்லினில் தரையிறங்கியது. இன்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். வணிகத் தலைவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் சமூகத் திட்டத்தில் உரையாற்றுவது. இந்தப் பயணம் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.