பென்டகனை மிஞ்சிய வளாகம்..!! சூரத்தில் பிரமாண்ட அலுவலகத்தை திறந்துவைத்த பிரதமர்..!!
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அலுவலக கட்டடத்தை விட பெரிய அலுவலகம் குஜராத் மாநிலம் சூரத்தில் அமையப்பெற்றுள்ளது.
சூரத் டைமண்ட் போர்ஸ்
உலகில் அமைந்துள்ள மிக பெரிய அலுவலகமாக சுமார் 80 ஆண்டுகளை நெருங்கி இது வரை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அலுவலகம் இருந்து வந்தது. அந்த அலுவலகத்தை மிஞ்சி தற்போது சூரத் நகரில் அமைந்துள்ள கட்டடம் உலகின் பெரிய அலுவலகம் என்ற பெயரை பெற்றுள்ளது.
சூரத் டைமண்ட் போர்ஸ் (Surat Diamond Bourse) எனப்பெயரிட்டுள்ள இந்த அலுவலகம் சுமார் 35 ஏக்கரில் 15 மாடிகளை கொண்ட கட்டடம் 71 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. வைரம் தொழில் சார்ந்த, சுமார் 65,000 பேர் பணிபுரியும் இடமாக அமைந்துள்ள இந்த இடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்கு
அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது மூன்றாவது பதவிக்காலத்தில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் இந்தியாவும் இருக்கும் என்று தேசத்திற்கு இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளேன் என்று சொன்னதை குறிப்பிட்டு, அதனை இலக்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அ
தே நேரத்தில், இந்திய வைர வடிவமைப்பாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி, புதிய வைர வணிகம் வருவதால், மேலும் 1.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்து, 5 அல்லது 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காகக் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று கூறினார்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi inaugurates the New Integrated Terminal Building of Surat Airport. pic.twitter.com/79M7UJEZn1
— ANI (@ANI) December 17, 2023