விண்ணிற்கு செல்லவிருக்கும் மோடியின் புகைப்படம்
பிப்ரவரி மாத இறுதியில் ராக்கெட் மூலமாக பிரதமர் மோடியின் புகைப்படமும் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சார்ந்த தனியார் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ், இதற்கு முன்னர் கலாம் சாட் என்ற சிறிய ரக செயறக்கை கோளினை விண்ணுக்கு அனுப்பி சாதனை புரிந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மாத( பிப்ரவரி) இறுதிக்குள் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. அந்த செயற்கைக்கோளுக்கு சதீஷ் தவான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம், பகவத் கீதை நூல், மற்றும் 25 ஆயிரம் பொதுமக்களின் பெயர்களையும் சேர்த்து விண்வெளிக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளானது விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் மற்றும் தகவல் தொடர்பு குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி அறிவியலில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர்ஸ்ரீமதி கேசன் கூறினார்.