"மோடி நிறைய பேய்களுக்கு உதவினார்” நமீதா தமிழால் அலறும் மக்கள்
காரைக்காலில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நமீதா பேசிய தமிழால் ஒட்டுமொத்த தொண்டர்களும் அரண்டு போன சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா அவர்களை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவருக்கு ஏதுவாக இருக்கும் என பிரச்சாரத்தின்போது அவர் என்ன பேச வேண்டும் என ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்துள்ளனர். அதன்படி தனது அழகிய தமிழ் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார்.

அப்போது அவர், "மோடிஜி முத்ரா திட்டம் உங்களுக்காக கொண்டி வந்து மூலம் நிறைய பேய்களுக்கு உதவி செய்தார் என்று கூறி அதிர வைத்தார் தாமரைக்கு ஓட் போட்ரதுனாலே, மாசத்துக்கும் குடும்பத்துக்கும் தலைவிக்கு 1500 ரூபாய் கொடுக்க போறேன், அது கூட இலவசமா..! மற்றும் வருசத்துக்கு ஆரு கேஸ் சிலிண்டர்ஸ் கொடுக்கபோறேன் ..
அது கூட இலவசமாய் என்றார்
இடமில்லாதவர்களுக்கு இடம் கொடுத்து வீட்டும் கட்டிக் கொடுக்கிறோம் அதுவும் இலவசமாய் என்ற நமீதா உங்களுக்கு ப்ரீயா வாசிங்மெசின் கொடுக்க போறென்" என்றவர் இறுதியில் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் எனக் கூறி முடித்தார்.