‘Wildlife Photographer’ ஆக மாறிய பிரதமர் மோடி...பொம்மன் - பெள்ளியுடன் ஓர் சந்திப்பு

Tamil nadu Narendra Modi
By Thahir Apr 09, 2023 10:18 AM GMT
Report

முதுமலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் கலந்துரையாடினார்.

Wildlife Photographer ஆக மாறிய மோடி 

நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை இன்று பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி மைசூரில் இருந்து வருகை தந்தார்.

முன்னதாக, இன்று காலை மைசூரில் இருந்து பந்திபூர் செல்லும் பிரதமர் அங்குள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை பார்வையிட்டார். அங்கு ‘Wildlife Photographer’ போல் அவதாரம் எடுத்த பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

modi-has-become-a-wildlife-photographer

பின்னர், காலை 9.35 மணிக்கு மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சாலை மார்க்கமாக புறப்பட்ட பிரதமர்,

பொம்மன்-பெள்ளியை சந்தித்து பேச்சு 

அங்கு ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant whisperers’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் உரையாடினார்.

மேலும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைக்கு கரும்பு கொடுத்து, தும்பிக்கையை தடவிக்கொடுத்தார்.

modi-has-become-a-wildlife-photographer

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதியழகன் சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் வனத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினை சிறப்பாக முடித்துவிட்டு மசினகுடியில் இருந்து மீண்டும் மைசூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி.