பெட்ரோல் டீசல் விலையில் பாரிய ஏற்றம் - தேர்தல் முடிந்த பின் மோடி அரசின் திட்டம் இதுதான்!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தேர்தலின் பின்னர் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று (ஏப்.23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி பங்கு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கோடாக் இன்ஸ்டிடியூஷனல் இக்விட்டீஸ் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக முக்கிய அறிக்கைகை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரும் என கணித்துள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 120 டாலராக உயர்ந்துள்ளது.
ஆனால் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கும், ரீட்டெயில் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல் - டீசல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகின்றது.
குறித்த விலை வித்தியாசமானது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் சுமையாக மாறி வருகிறது.
இந்த விலை வித்தியாசத்தை சமாளிக்க மத்திய அரசு ரீட்டெயில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருக்க வேண்டும், ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக விலையை உயர்த்தவில்லை.
இதற்கிடையில் சுத்திகரிப்பு நிறுவனங்களின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு கலால் வரியை குறைந்தது ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் தேர்தலின் பின்னர் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை நடைமுறைப்படுத்தும் என்று இந்நிறுவனம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.