ஒரு ரூபாய் கூட திருடாத ஆட்சி பிரதமர் மோடி ஆட்சி - அண்ணாமலை
என் மண் என் மக்கள்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜகவிற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக பாஜக தலைவைர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றார்.
நடைப்பயணத்தின் ஆங்காங்கே பொதுகூட்டமமும் நடத்தி மக்களிடம் 9 ஆண்டுகால பாஜக ஆட்சி குறித்தும் விவரித்து, மாநில ஆளும் கட்சியான திமுக மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றார்.
ஒரு ரூபாய் கூட...
அதன்படி, அண்ணாமலை நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில். யாத்திரையை மேற்கொண்டார். அப்போது மக்களிடம் உரையாற்றிய அவர் “நான் பசங்க கிட்ட சொன்னேன் யாரும் ட்விட்டரில் #GoBackStalin போடாதீங்க என்று, ஆனால் யாத்திரை முடித்து விட்டு வந்து பார்த்தால் ஆள் இந்தியா ட்ரென்டிங்கில் நம்பர் ஒன்னில் அது தான் இருக்கிறது என்றார்.
9 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்துவருகிறது, அதில் ஒத்த பைசா கூட திருடாத ஆட்சி மோடி ஆட்சி என பெருமிதம் தெரிவித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களை கைப்பற்றி சரித்திரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டு, 3ஆம் முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய போகிறது” என உறுதிபட தெரிவித்தார்.