மோடி அரசு பெட்ரூம் உரையாடல்களை கூட ஒட்டுக் கேட்கும்.. காங்கிரஸ் விமர்சனம்!

government modi congress bedroom
By Irumporai Jul 19, 2021 02:20 PM GMT
Report

பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் படுக்கையறை உரையாடல்களைக் கூட மத்திய அரசு ஒட்டுக் கேட்கும் என விமர்சித்துள்ளது .

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு காரணமாக மத்திய அரசு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், மூத்த தலைவருமான ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் :

நாட்டின் பாதுகாப்பு மொத்தமாக பறிபோயுள்ளது. இது தேசத்துரோகமானது. இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது.

மோடி அரசு படுக்கையறை உரையாடல்களைக் கூட ஒட்டுக் கேட்கும் என விமர்சித்துள்ளார்.

மேலும் ,மத்திய உள்துறை அமித் ஷாவே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.