இ - ரெஜிஸ்டரில் மதுரை போகும் மோடி.. ஓட்டுனர் செல்லூர் ராஜூவாம்? - கவனமில்லாத இ ரெஜிஸ்டர்!
ஊரடங்கில் முக்கிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்றும், இ.ரிஜிஸ்டர் செய்துகொண்டால் மண்டலம் விட்டு மண்டலம் செல்லலாம் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அதே சமயம் இ.ரிஜிஸ்தர் முறையில் குளறுபடி இருப்பதால் இதை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் சாலையில் வருகின்றன.
இதனால் காற்றில் பறக்கிறது சமூக இடைவெளி இந்த நிலையில் பிரதமர் மோடி பெயரில் சென்னையில் இருந்து மதுரை செல்ல, தமிழக அரசின் இ-ரிஜிஸ்தர் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள் சிலர்.
அதில் மோடி மதுரை செல்வதாகவும், அவருடன் அமித்சா செல்வதாகவும், வாகனத்தின் ஓட்டுநராக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செல்வதாக பதிவு செய்திருக்கிறார்கள்.
பயணம் நாள், தொலைபேசி எண், வாகன எண் அனைத்தையுமே போலியாக உள்ளிடு செய்திருக்கிறார்கள். இவற்றை எல்லாவற்றையுமே ஏற்றுக்கொண்டு, 4ம் தேதிக்கு இ ரிஸ்தர் அனுமதி அளித்திருக்கிறது.
இ.ரிஜிஸ்தர்.
இ ரிஜிஸ்டர் பதிவு முறையாக கவனிக்கப்படாமல் இருப்பதால் இதுபோன்று பொதுமக்கள் சாலைகளின் வாகனங்களில் அதிகம் செல்கின்றனர் இதை ஒழுங்குபடுத்த வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.