பிரபல முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

narendra modi passed away tweet playback singer lata mangeshkar express grieve
By Swetha Subash Feb 06, 2022 06:01 AM GMT
Report

இந்தி திரையுலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவரின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மருத்துவமனைக்கு விரைந்தார்.

பின்பு சிறிது நேரத்தில் பாடகி லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரின் உயிரிழப்பு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடியும் ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார்.

அதில், “லதா திதி'யிடம் இருந்து நான் எப்போதும் அளவற்ற பாசத்தைப் பெற்றிருப்பதை பெரும் மரியாதையாகக் கருதுகிறேன். அவருடனான எனது உரையாடல்கள் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

லதா திதியின் மறைவால் சக இந்தியர்களுடன் நானும் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினரிடம் பேசி எனது இரங்களை தெரிவித்தேன். ஓம் சாந்தி.” என பதிவிட்டுள்ளார்.