பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை மோடி அறுக்கிறார் : கொந்தளித்த கே.எஸ் அழகிரி!
பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளை சார்ந்த பாதிரியார்கள் உட்பட 500 பேர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி,“மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற மசோதாவை, தமிழக அரசு சட்டபேரவையில் கொண்டு வந்துள்ளதற்கு நன்றி. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அடிப்படை விலை இல்லாத அபாயச் சூழல் ஏற்படும் எனவும் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு 644 கோடி ரூபாயும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட நான்கு மொழிகளுக்கும் சேர்த்து 22 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என கூறிய கே.எஸ் அழகிரி .
முக்கியமான துறைகள் தனியார்வசம் செல்வதால் இந்தியாவின் பொருளாதாரம் மிக பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும். பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை மோடி அறுக்கிறார்.
நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினால், கேள்விக்கான பதிலை வழங்காமல், அவர் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்.
நிதித்துறை குறித்து தெரியாத நபர் நிதி அமைச்சராக உள்ளார். தமிழகத்தில் கலால் வரியை குறைத்த முதல்வர் ஸ்டாலின் திறமையானவரா? இல்லை 7 வருடம் பெட்ரோல் விலையை அதிகரித்த மோடி திறமையான பிரதமரா? என்பது நாட்டுக்கே தெரியும்எனக் கூறினார்.