பிப்ரவரி 25ந் தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி

election admk bjp
By Jon Mar 01, 2021 01:22 PM GMT
Report

பிரதமர் மோடியின் வருகையை அடுத்து கோவையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு. வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகிறார். பின்னர் கோவையில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொடிசியா வளாகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார்.

பிரதமர் வருகையையொட்டி கோவையில் தமிழக போலீசார் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.