அதானிக்காக இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பிரதமர் மோடி : பதவி விலகிய இலங்கை மின்சார வாரிய தலைவர்

Narendra Modi Kanchana Wijesekera
By Irumporai Jun 13, 2022 12:14 PM GMT
Report

 அதானி குழுமத்திற்கு மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தம் வழங்க இலங்கைக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கையில் பெரும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த மோடி

இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் இதனை தெரிவித்தார்.காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

அதானிக்காக இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பிரதமர் மோடி : பதவி விலகிய இலங்கை மின்சார வாரிய தலைவர் | Modi Claim Over Contract Quits Lanka Official

ஆனால் இதற்கு அதிபர் ராஜபக்சே கடும் மறுப்பு தெரிவித்து இருந்தார்.அதிபர் ராஜபக்சே தனது ட்விட்டர் பதிவில், மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக கோப் குழு விசாரணையில் இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் தெரிவித்த கருத்து குறித்து, எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

அதானிக்காக இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பிரதமர் மோடி : பதவி விலகிய இலங்கை மின்சார வாரிய தலைவர் | Modi Claim Over Contract Quits Lanka Official

இதுதொடர்பான தகவல் பரிமாற்றம் தொடரும் என கூறி இருந்தார் இலங்கை தற்போது கடுமையான மின் பற்றாக்குறையில் உள்ளது, மேலும் மெகா மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு அதிபர் விரும்புகிறார். இருப்பினும், அத்தகைய திட்டங்களை வழங்குவதில் தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தப்படாது.

பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவுகள் குறைவாகவே உள்ளன. ஆனால் திட்டங்களுக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும், இது இலங்கை அரசாங்கத்தால் வெளிப்படையான மேற்கொள்ளப்படும் என அதிபர் அலுவலகம் சார்பில் கூறபட்டது.

இலங்கை தனது சட்டங்களை மாற்றி, எரிசக்தி திட்டங்களுக்கான போட்டி ஏலத்தை கைவிட்ட ஒரு நாளிலேயே இத்தகைய சர்ச்சை வெடித்தது. அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட மன்னார் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை எளிதாக்கும் வகையில் அரசாங்கம் இந்த மாற்றத்தை செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

வெடித்த சர்ச்சை

அதேநேரம் பாரதீய ஜனதாக்கட்சியின் அழுத்தம் இந்தியாவை கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சே பற்றி கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்றும் உணர்ச்சிவசப்பட்டு, அவ்வாறு கூறியதாகவும் பெர்டினாண்டோ குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது வாபஸ் பெறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து இலங்கை அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ பதவிவிலகி உள்ளார்.

இந்த தவலை மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா