தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி
தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்துள்ளார் பிரதமர் மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் சூடுபிடித்துள்ளது, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம் வருகிற 4ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதில் 150க்கும் மேற்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து உயர்மட்ட தலைவர்கள் சிலரை மட்டும் சந்தித்து பேசலாம் என கூறப்படுகிறது.
நாளை புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரத்திற்காக சிறப்பு விமானம் மூலம் டெல்லியிருந்து சென்னை மீனம்பாக்கம் வரும் மோடி, ஹெலிகொப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.
மாலை 5.50 மணியளவில் சென்னை புறப்படுகிறார், அடுத்த நாள் நிர்வாகிகள் சிலரை சந்திப்பு பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
