தீவிரவாதத்தின் கொடூர முகத்தை தி கேரளா ஸ்டோரி காட்டுகிறது : பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு

BJP Narendra Modi
By Irumporai May 05, 2023 10:32 AM GMT
Report

தீவிரவாதிகளின் கொடூர முகத்தை தி கேரளா ஸ்டோரி காட்டுவதாக கர்நாடகா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  தி கேரளா ஸ்டோரி

தற்போது வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக காட்டுவதாக கூறப்பட்டது , ஆகவே இந்த திரைப்படங்கள் வெளியாகும் இடங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தின் கொடூர முகத்தை தி கேரளா ஸ்டோரி காட்டுகிறது : பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு | Modi Campaign Movie The Kerala Story Karnataka

 பிரதமர் தேர்தல் பிரச்சாரம்

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார், கர்நாடகா தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதிகளின் திட்டத்தை வெளிப்படுத்தும் தீவிரவாதிகளின் உண்மை முகத்தை தி கேரள ஸ்டோட்ரி காட்டுவதாக கூறிய பிரதமர் மோடி தீவிரவாதத்திற்கு எதிராக பேசினாலோ நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் காங்கிரசுக்கு வயிறு வலிக்கிறது .

காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கிகளுக்காக தீவிரவாதத்திற்கு அடி பணிந்துள்ளது வியப்பை கொடுப்பதாக கூறிய பிரதமர் மோடி எனவே, தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து, தீவிரவாத போக்குடன் நின்று போராடி வருகிறது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் பாதுகாத்துள்ளது என்றும் பிரதமர் மோடி தனது பரபரப்புரையில் கூறியுள்ளார்.