ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி: மோடி
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பதிவாகி இருப்பது ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றதில் பெருவாரியான வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள தொகுதிகளுக்கு வருகிற 29ம் தேதி தேர்தல் நடைபெற்ற முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது.

நேற்று நடைபெற்ற பிரசாரத்தின் போது மோடி பேசுகையில், மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது, பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை தடுக்க முடியும்.
இங்கு பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது, ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் திரிணாமூல் காங்கிரஸின் கொள்கை ஆபத்தானது, இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
முதற்கட்ட தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பதிவானது ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி, பாஜக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
