மேடையில் பேசிக்கொண்டிருந்த மோடி..சட்டென எழுந்த ஓடிய அண்ணாமலை..அமைதியான அரங்கம்
வேலூரில் பிரச்சாரக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையம் சென்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
வேலூர் - கோவை பொதுக்கூட்டம்
7-வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று சென்னையில் ரோட் ஷோ நடத்தி சென்னை பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பால் கனகராஜ், வினோஜ்.பி.செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.
இன்று வேலூர் சென்று அங்கு கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்திற்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர், திமுகவை கடுமையாக சாடினார்.
ஓடி சென்று
வேலூர் பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அங்கிருந்து நேராக கோயம்பத்தூர் வந்தடைந்தவர் மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.
பிரதமர் மோடி மேடையில் உரையாற்றி கொண்டிருந்த போதே, பிரதமருக்கு மொழிபெயர்த்து கொண்டிருந்து
போதே, இருக்கையில் அமர்ந்திருந்த அண்ணாமலை, உடனே ஓடி சென்று அவரின் மைக்கை சரி செய்தார்.
பின்னர் மீண்டும் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசியதை தமிழில் அவர் மொழிபெயர்த்தார்.