80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
PM Modi calls for Hoisting Flags at Homes: இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நாட்டின் தலைநகரில் தயாராகி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் கொடியேற்றி அதனை செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய பாடலாக மத்திய அரசு அறிவித்துள்ள வந்தே மாதரம் பாடல் டெல்லி செங்கோட்டையில் முதன்முறையாக பாடப்பட இருக்கிறது.
அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளாக 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கம் நாட்டில் செயல்பட்டுவரும் சூழலில், இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக இதனுடன் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
