பிரதமர் மோடி போஸ்டர் மீது சாணி அடித்த பெண் கைது...!

Narendra Modi
By Nandhini Sep 19, 2022 06:42 AM GMT
Report

பிரதமர் மோடி போஸ்டர் மீது சாணி அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

பிரதமர் மோடியின் பிறந்தநாள்

கடந்த 17ம் தேதி இந்திய பிரதமர் மோடி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் உட்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

பாஜகவினர் சாலை மறியல்

நேற்று முல்லை நகர் பிரதான சாலையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களில் மர்ம நபர்கள் சாணி அடித்திருந்தார்கள்.

இதனையடுத்து, இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று பாஜவினர் 50-க்கும் மேற்பட்ட பாஜவினர் தாம்பரம் நகர தலைவர் கணேஷ் தலைமையில் பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் பாஜகவினரை கலைந்து சென்றனர்.

போஸ்டர் மீது சாணி அடித்த பெண் கைது

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த சிசிடிவி கேமராவில் பெண் ஒருவர் பாஜக போஸ்டர் மீது சாணி அடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தற்போது அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.    

modi-birthday-poster-woman-arrest