''மோடியின் தாடி மட்டுமே வளர்ந்திருக்கிறது '' - கிண்டல் செய்யும் மம்தா பானர்ஜி

modi West Bengal mamata beard
By Jon Mar 26, 2021 12:35 PM GMT
Report

மோடியின் தாடி மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதாக , மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிண்டல் செய்துள்ளார் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளன. நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரசாரத்தின் போது பேசிய மம்தா பானர்ஜி நாட்டில் தொழில்துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது.  

சில நேரங்களில் அவர் தன்னை தானே சுவாமி விவேகானந்தா என்று கூறிக் கொள்கிறார். சில நேரங்களில் தனது பெயரை அரங்குகளுக்குபெயரிடுகிறார்.அவரது மூளையில் ஏதோ பிரச்னை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.