21-ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவை உருவாக்க உதவும் பட்ஜெட் - பிரதமர் மோடி..!
இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் வீடியோ
அப்பதிவிற்கு, #ViksitBharatBudget சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கிறது மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கிறது என caption செய்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், இந்தியாவின் நான்கு தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த பட்ஜெட் அதிகாரம் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டுக்கள்...
நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான பட்ஜெட் இது என்றும், 2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை வலுப்படுத்தவும் பட்ஜெட் உத்தரவாதம் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைய தலைமுறையினரின் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் பட்ஜெட் உள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பிற்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
The #ViksitBharatBudget benefits every section of the society and lays the foundation for a developed India. https://t.co/RgGTulmTac
— Narendra Modi (@narendramodi) February 1, 2024
மேலும், இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் சமயத்தில் மூலதனச் செலவினங்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியாக வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இது 21ஆம் நூற்றாண்டின் நவீன உள்கட்டமைப்புகளை இந்தியாவிலும் உருவாக்க உதவும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.