இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்புகளும் மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதே சமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மட்டுமே பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனைகள் மேற்கொண்டார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அந்த மாவட்டத்தில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.