ஐபிஎல் இறுதிப்போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்டுகளிக்க ஏற்பாடு - வெளியான சுவாரஸ்ய தகவல்!

Amit Shah Narendra Modi IPL 2022
By Swetha Subash May 29, 2022 08:04 AM GMT
Report

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26-ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.

வழக்கம் போல் 8 அணிகள் என்றில்லாமல் இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் என பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுக்கான ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

ஐபிஎல் இறுதிப்போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்டுகளிக்க ஏற்பாடு - வெளியான சுவாரஸ்ய தகவல்! | Modi And Amit Shah To Watch Ipl 22 Finals Today

இந்த சுற்றுகளின் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.

அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தன் படைபல்த்தை நிரூபித்துள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஐபிஎல் இறுதிப்போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்டுகளிக்க ஏற்பாடு - வெளியான சுவாரஸ்ய தகவல்! | Modi And Amit Shah To Watch Ipl 22 Finals Today

இந்நிலையில் இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.