நாம் இருவர் நமக்கிருவர் கொள்கை உடையவர்கள் மோடி மற்றும் அமித்ஷா: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

india party bjp congress
By Jon Mar 02, 2021 02:47 PM GMT
Report

நாம் இருவர் நமக்கிருவர் என்ற கொள்கையோடு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இரண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே உதவியாக இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்க சட்டப்பேர்வை நடக்க சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாட்லில் கலந்து கொண்டார். அங்கு வழக்கறிஞர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.தொடர்ந்து, பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து வழக்கறிஞர் ஒருவர் கேள்விஎழுப்பினார். பிரதமர் இத்தேசத்துக்கு பயனற்றவராக இருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் விமர்சித்தார்.

நாம் இருவர் நமக்கிருவர் கொள்கை உடையவர்கள் மோடி மற்றும் அமித்ஷா: ராகுல் காந்தி கடும் விமர்சனம் | Modi Amit Shah Rahul Gandhi Harsh Critic

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, நீங்கள் பிரதமர் மோடி பயனற்றவராக இருக்கிறார் என்று கூறினீர்கள். நான் அதில் சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். இங்கே ஒவ்வொரு மனிதரும் யாரேனும் ஒருவருக்கு உதவியாகத் தான் இருக்கிறோம். நான் விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறேன்.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்நாட்டில் இருவருக்கு ( அம்பானி, அதானி) மிகப்பெரிய உதவியாக இருக்கிறார். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையில் அவர் உதவியாக இருக்கிறார் என்று கூறினார். மேலும் பேசிய ராகுல் காந்திவிவசாயிகள் போராட்டம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை பாஜக அரசு நெறிக்கிறது என்றார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கேள்வி கேட்பவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. நீதித்துறை, ஊடகம் என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விட்டது. மோடியும், அமித் ஷாவும் நாட்டில் இருவர் நலனுக்காகவே மட்டுமே செயல்படுகின்றனர். ஆனால், காலம் வரும். அப்போது இந்த இருவரும் தூக்கி எறியப்படுவர் என்றார்.