சட்டென காலில் விழுந்த வானதி ..அட்வைஸ் பண்ண பிரதமர் மோடி...வைரல் வீடியோ
33 % மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்த நிலையில், இன்று பிரதமர் மோடிக்கு மக்களவையில் அவருக்கு பாஜக மகளிர் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
33% மகளிர் இடஒதுக்கீடு
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு தாக்கல் செய்யப்பட்ட மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது.
இதற்கான வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த நாரி சக்தி வந்தன் மசோதா 128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நாரி சக்தி வந்தன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
பிரதமர் அறிவுரை
இந்நிலையில், இன்று மக்களவை வந்த பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க மசோதாவாக மகளிர் பாஜகவினர் இதனை முன்மொழிந்து பிரதமருடன் புகைப்படம் எடுத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அப்போது வரவேற்பின் போது, பிரதமர் மோடியின் காலில் திடீரென தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், விழுந்த நிலையில் அதனை கண்டித்த பிரதமர் மோடி அவருக்கு அறிவுரை கூறி சென்றார். இந்த வீடியோக்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.