குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும் கொரோனா தடுப்பூசி

Covid 19 Moderna vaccine
By Petchi Avudaiappan Jun 21, 2021 10:26 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

குழந்தைகளுக்கான மாதிரியில் மாடர்னா கொரோனா தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது என்று சயின்ஸ் இம்யூனாலஜி விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

தடுப்பூசிகளின் நீண்டகால பாதுகாப்பை புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அதில் தொற்றுநோயைக் குறைப்பதற்கான பாதுகாப்பான முறைகளில் சிறு குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் முக்கியமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சயின்ஸ் இம்யூனாலஜி விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் மாடர்னா எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி மற்றும் புரத அடிப்படையிலான தடுப்பூசி ஆகியவை, குழந்தைகளுக்கான மருத்துவ ஆராய்ச்சியில் SARS-CoV-2 க்கு நீடித்த நடுநிலையான நோயெதிர்ப்பு தன்மையை வெளிப்படுத்தியதை கண்டறிந்தாக கூறப்பட்டுள்ளது.