காதலனை பழிவாங்கிய மாடல் அழகி - ரூ.83 லட்சம் வெகுமதியாக அளித்த ஐ.ஆர்.எஸ் அமைப்பு!
வரி ஏய்ப்பு செய்த காதலனை சிக்க வைத்த பெண்ணுக்கு ஐ.ஆர்.எஸ் அமைப்பு ரூ.83 லட்சம் வெகுமதியாக வழங்கியுள்ளது.
தகராறு
அமெரிக்காவை சேர்ந்த அவா லூயிஸ் என்ற மாடல் அழகியின் டிக்டாக் பதிவொன்று 2.8 மில்லியனை கடந்து வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் "எனது முன்னாள் காதலனின் கணக்கு வழக்குகளை, நாங்கள் இருவரும் தான் கவனித்தோம். சில சமயங்களில் அவன் தவறான கணக்குகளை சமர்ப்பித்து வரி செலுத்துவதை தவிர்ப்பான்.
இதற்கிடையில் அவன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட முடிவு செய்தேன்.
காதலன் கைது
அப்போது எந்த தவறும் செய்யாத நான் எதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவனை பழி வாங்க முடிவு செய்தேன்.
எனவே, வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக அமெரிக்காவின் ஐ.ஆர்.எஸ் அமைப்பில் புகாரளித்தேன். அதன் அடிப்படையில் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், குற்றவாளியை அடையாளம் காண்பித்ததற்கு அவர்கள் எனக்கு $100,000 (ரூ.83 லட்சம்) வெகுமதியாக வழங்கினார்கள். இந்த பணத்தை வைத்துக்கொண்டு தற்போது எனது சுற்றுலாப் பயணத்தை மகிழ்ச்சியாக கழிக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.