கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீ வைத்த நபரின் மாதிரி வரைப்படம் வெளியீடு

Kerala Death
By Thahir Apr 03, 2023 09:37 AM GMT
Report

கேரளாவில் ஓடும் ரயிலில் சகபயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டுள்ளது கேரள காவல்துறை.

ஓடும் ரயிலுக்கு தீ - 3 பேர் உயிரிழப்பு 

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரண்டு பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்து சகபயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தீ படர்ந்து பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அலறினர். தீக்கு பயந்து ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ வைத்த நபரின் மாதிரி வரைப்படம் வெளியீடு 

இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.

Model sketch of train arsonist released in Kerala

மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் முன்னதாக வெளியாகி இருந்தது. அதனை தற்போது அடிப்படையாக வைத்து கேரள காவல்துறை குற்ற்றவாளியின் மாதிரி வரைபடத்தை வெளியீட்டு அவரை தீவீரமாக தேடிவருகிறது கேரளா மாநில போலீசார்.