தூக்கில் பிணமாக தொங்கிய பிரபல மாடல் அழகி : போலீசார் தீவிர விசாரணை

Kerala
By Swetha Subash May 13, 2022 09:40 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் 20 வயதான ஷஹானா. இளம் மாடல் அழகியான இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

சஜ்ஜாத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் கோழிக்கோட்டில் சேவாயூர் பகுதியில் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கிய பிரபல மாடல் அழகி : போலீசார் தீவிர விசாரணை | Model Shahana Found Dead In Kozhikode House

இன்று காலை நீண்ட நேரமாகியும் ஷஹானா அவரது அறையில் இருந்து வெளியே வராததால் கணவர் சஜ்ஜாத் அறையை திறந்து பார்த்த போது அங்கு ஷஹானா, ஜன்னலில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சஜ்ஜாத் இது குறித்து கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

ஷஹானா இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பணத்துக்காக சஜ்ஜாத் தொடர்ந்து ஷஹானாவை அடித்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினர்.

இது குறித்து ஷஹானாவின் தாயார் கூறும்போது, ஷஹானா தன்னை கணவர் துன்புறுத்தி வருவதாக ஏற்கனவே கூறி இருந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை.

அவர் 20-வது பிறந்தநாள் விழாவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்திருந்தார் என கூறினார். இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் சஜ்ஜாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.